🔴உமா ஓயா திட்டம் , சுருக்கமான முழு விளக்கம்


ஈரான் மற்றும் இலங்கையின் ஜனாதிபதிகளின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது . நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றாக இத்திட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது .

ஈரான் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று காலை இலங்கை வந்தார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்  ​​என்பது இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய திட்டமாகும்.

தென் கிழக்கில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக சுற்றுச்சூழலுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உமா ஓயாவில் வருடாந்தம் நிரம்பும் சராசரியான 145 மில்லியன் கனமீற்றர் (MCM)  நீருக்கு மேலதிகமான நீரை கிரிந்தி ஓயாவுக்கு  திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 4500 ஹெக்டேயர் புதிய காணிகளுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப்பாசன வசதி கிடைக்கும்

பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் குடிநீர் தேவைகளுக்கும் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கும் 39 மில்லியன் கன மீற்றர் நீரை இத்திட்டம் மூலம் வழங்க முடியும் .

மேலும்  இந்த அமைப்பு ஆண்டுதோறும் 290 ஜிகாவாட்  மின்சாரத்தை  இலங்கை மின் கட்டமைப்புக்கு வழங்கவுள்ளது .

இத்திட்டம் புஹுல்பொல மற்றும் டயரபா   நீர்த்தேக்கங்களையும் இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர் இணைப்பு சுரங்கப்பாதை ,

15.2 கி.மீ நீளமுள்ள நீரோட்ட சுரங்கப்பாதை,

நிலத்தடி மின் உற்பத்தி நிலையம் மற்றும் பிற தொடர்புடைய கட்டுமானங்களை இந்த திட்டம் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அப்போதைய பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எரிசக்தி அமைச்சருக்கும் இடையில் 2007 நவம்பர் 27 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி  "உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம்" ஆரம்பமானது .
(ஜனாதிபதி ஊடகப்பிரிவு)





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை