🔴இலங்கையில் உருவாகும் ஸ்ட்ராபெர்ரி முன்னோடி கிராமம்


இலங்கையின் முதலாவது ஸ்ட்ராபெரி முன்மாதிரி  கிராமத்தை நுவரெலியாவில் நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த முன்னோடி திட்டத்திற்காக நுவரெலியாவில் இருந்து 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடுகள், ஸ்ட்ராபெரி செடிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் வழங்கல் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பயிர்ச்செய்கைக்காக ஒரு விவசாயிக்கு சுமார் 13 இலட்சம் ரூபா செலவழிக்கபட உள்ளதாகவும் அதில் ரூபா 750,000  விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் மீண்டும் அரவிடப்படாமல் வழங்கப்பட்டுள்ளது. 

மிகுதி தொகையை திருப்பி வழங்கும் பொறுப்பை அந்தந்த ஸ்ட்ரோபெர்ரி பண்ணையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்க வேண்டும். 

ஸ்ட்ராபெரி முன்னோடி திட்டத்திற்காக 40 பாதுகாப்பான வீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பாதுகாப்பான வீடுகள் அனைத்தையும் ரிமோட் கண்ட்ரோல் அப்ளிகேஷன் மூலம் முற்றிலும் தானியங்கி முறையில் இயக்க முடியும் என்றும் விவசாயத் துறை தெரிவித்துள்ளது .




Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை