🔴சங்காவின் செயல் இந்தியாவில் வைரல்


குமார் சங்கக்கார நம் நாட்டில் பிறந்து தனது அசத்தலான ஆட்டம் மற்றும் சிறந்த குணத்தினால் உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார் .


தற்போது சங்கக்காரா இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகிறார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டியின் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல் அணி தற்போது வரையில் முன்னிலையில் உள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றியின் பின்பு ராஜஸ்தான் அணியின் துரவ் ஜூவெல்லின் பெற்றோர்கள் தங்கள் மகனைச் சந்திக்க மைதானத்திற்கு வந்தனர் .

அப்போது சங்கக்காரவைப் பார்த்த  ஜூவலின் தந்தை சந்தோஷத்தில் சலுட் செய்து தனது அன்பை வெளிப்படுத்துவார் .

இதனை பார்த்த சங்கக்காரா தனது தொப்பியை கழற்றி அவருக்கு மதிப்பு வழங்கும் வீடியோ தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது .

விளையாட்டை தவிர்த்து சங்கக்காரா சங்கக்காரா ஒரு சிறந்த மனிதர் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்

வீடியோ 👇




Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை