🔴இலங்கைக்காக முதல் தங்கப்பதக்கம் வென்ற நாகலிங்கம் காலமானார்


இலங்கையின் முன்னாள் சர்வதேச தடகள விளையாட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும், கிரிக்கெட் வீரராகவும் சாதித்த நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த எதிர்வீரசிங்கம் தனது 89ஆவது வயதில் நேற்று 18ம் திகதி காலமானதாக தெரிவிக்கப்படுகிறது .

யாழ்ப்பாணம் மத்திய மகா வித்தியாலயத்தின் சிறந்த மாணவராக விளங்கிய திரு.எதிரிவீரசிங்கம் அவர்கள் ஒரு திறமையான தடகள வீரராகவும் அதேபோன்று துடுப்பாட்ட வீரராகவும் இருந்துள்ளார் .

இலங்கை சார்பாக 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்  பங்கேற்ற பெருமை இவரை சாரும் .

இலங்கைக்காக ஆசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் வெற்றி கொண்ட முதல் இலங்கை வீரர் இவராவார் .

1954 மணிலா, 1958 டோக்கியோ, மற்றும் 1962 ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக இவர் பங்கேற்றுதள்ளார் .
அதில் 1958ல் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 1962ல் வெள்ளிப் பதக்கமும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தார் .




Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை