🔴சுற்றுலாத்துறையில் அதிரடி மாற்றம் செய்ய உள்ள இலங்கை


ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

இது தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலா அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவைப் பத்திரம் சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோருடன் கூட்டுப் பத்திரமாக உருவாக்கப்பட உள்ளது.

இந்த நடவடிக்கையானது 50 நாடுகளுக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா மூலம் இலங்கைக்கு விஜயம் செய்வவதற்கான  வாய்ப்பை வழங்கும் .

இது இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இவ்வருடம் இலங்கை 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளது .


இவ்வாறு 50 அதிகமான நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் பட்சத்தில் இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கருத்துரையிடுக

புதியது பழையவை