🔴ஸ்ரீலங்கன் இன் பாரிய கடன் சுமையை பொறுப்பேற்ற அரசு


ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செலுத்த வேண்டிய கடன்தொகையான  510 மில்லியன் அமெரிக்க டொலர்களை  செலுத்தும் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்  இன்று (5) தெரிவித்துள்ளார் .

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய   10,200 கோடி ரூபா ,  இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை வங்கிக்கு செலுத்த வேண்டிய வங்கி பிணை  68.2 மில்லியன் அமெரிக்க  டொலர் என   மொத்தமாக 302 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை செலுத்தும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக்கொண்டதாக   அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதன் மூலம் குறித்த பணத்தொகையை அரசாங்கம்   மீளப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை