🔴கேட் இளவரசிக்கு கேன்சர்


75 வயதான பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன .  தற்போது 42 வயதான அவரது மருமகள்  கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


புற்றுநோயின்  ஆரம்ப கட்டத்தில் அவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .


இதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அவர் வீடியோ  காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்த செய்தி பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதனிடையே இளவரசி பூரண குணமடைவார் என பிரார்த்திப்பதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

கேத்தரின் அல்லது கேட் அல்லது வேல்ஸ் இளவரசி பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் ஒரு சிறப்பு உறுப்பினராவதற்கு காரணம் அவர் அடுத்த அரச பதவியை பெற்றுக்கொள்ள இருக்கும் வாரிசான வில்லியமை மணந்ததன் காரணமாக ஆகும் .

கருத்துரையிடுக

புதியது பழையவை