🔴பிரதமர் சென்ற ஹெலிகாப்டர் ஐ தரையிரக்கும் பொழுது ஹோட்டலுக்கு சேதம்


மறைந்த முன்னாள் கெபினட் அமைச்சர் ரொனி டி மெல் அவர்களின் இறுதிச் சடங்கிற்கு சென்றுகொண்டிருந்த பிரதமர் பயணித்த விமானம் மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் தரையிறங்கச் செய்யும் பொழுது ஏற்பட்ட தோஷம் ஒன்றின் காரணமாக மாத்தறை விடுதியின் கூரை மற்றும் அங்கிருந்த உணவு பானங்களுக்கு பாரிய சேதம் உள்ளாகியுள்ளன.

ஹெலிகாப்டர் ஐ தரையிரக்கும் போது கடலில் இருந்து பலத்த காற்று வீசியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மாத்தறை விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார் .

குறித்த சம்பவத்தின் போது விடுதியில்  ​​உணவு, பானங்கள் பெற்றுக் கொண்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின்  மீது மணல், தூசி, குப்பைகள் விழுந்து பெரும் சிரமத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகி உள்ளனர் .

  இதன் காரணமாக குறித்த  விடுதியின் பஃபே சாப்பாட்டு மேசையில் இருந்த அனைத்து உணவுகளையும்  வீச வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது .

விமானம் சரியாக தரையிறங்கப்படாமைக்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் .

மாத்தறை விடுதியின் நிர்வாகம் சிரமத்திற்கு உள்ளான வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்களுக்கு ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக ரய்ஸ் செய்து உடனடியாக வழங்கி வைத்துள்ளார்கள் .

எவ்வாறாயினும், ஹெலிகாப்டர் இல் பாதுகாப்பாக    தரையிறங்கிய  பிரதமர் தினேஷ் குணவர்தன இறுதி சடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டார் .

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் மாத்தறை விடுதிக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப குறித்த தகவலை வெளியிட்டுள்ளது .

கருத்துரையிடுக

புதியது பழையவை