🔴நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தி , பாதை சமிக்ஞை   விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிச்சைக்காரர்களுக்கு பணம் இவ்வாறு பணம் கொடுப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு சேதம், வீதி விபத்துக்கள் மூலம் பிச்சைக்காரர்களுக்கு காயங்கள் ஏற்பட  காரணமாக அமைவதாக  போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் .

கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளிலும் பிச்சை எடுப்பவர்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

நாட்டின் பிரதான பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இது என்றும், வாகன சாரதிகளும் பயணிகளும் சந்திகளிலும் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பிச்சை கொடுப்பதை நிறுத்தினால் இதனை ஒழித்துவிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார் .

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வீடியோ செய்திகள் மூலம் புதிய நடவடிக்கைகள் குறித்து சாரதிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர்  அறிவித்துள்ளார்.

  ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 வரை சம்பாதிக்க முடியுமான தொழில்கள் தொடர்பாக இவர்களுக்கு அறிவுறுத்திய பொழுது ,

அந்த  பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு பிச்சை எடுப்பதன் மூலம்  ரூ.  15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பாதிப்பதாக கூறி குறித்த தொழில்களை மறுத்து உள்ளனர் .

கடந்த வாரத்தில் 94 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்களை நீண்ட நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க முடியாததால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர்  மேலும் தெரிவித்தார்.

பிச்சை எடுப்பதை முழுநேர தொழிலாக பலர் செய்து வருவதாகவும்  அவர்களில்    பெரும்பாலான பிச்சைக்காரர்கள் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ள உள்ளார்கள் . அவ்வாறான நபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார் .







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை