🔴கம்பெனிகள் வழக்கு தொடரும் பட்சத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பேன் , ஜனாதிபதி தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் பக்கம் நின்று வழக்குத் தொடர ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தோட்ட முதலாளிகள் வழக்கு சம்பள அதிகரிப்புக்கு எதிராக வழக்கு தொடரும் பட்சத்தில் ,  தொழிலாளர்கள் தரப்பில் இருந்து உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கொடகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் வெளியிட்டு இருந்தார் .

தம்முடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய வேதன அதிகரிப்பு செய்யப்பட்டமையினால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தோட்ட முதலாளிமார்  சங்கம் அறிவித்தது .

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தோட்ட முதலாளிகளின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கிறது .
(லங்காதீப)








Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment