🔴கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட ஆகாய பாலம் கொண்ட கட்டிடம் , என்ன இருக்கிறது ! சுருக்கமாக


இரண்டு  கட்டிடங்களுக்கு மத்தியில் ஆகாய பாலமுடன் இலங்கையில் நிர்மாணம் செய்யப்பட்ட பிரமாண்ட ஹோட்டல் கட்டிடம் ஐ.டி.சி. ரத்னதீப ஆகும் .

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பு தாஜ் சமுத்ரா மற்றும் சங்கிரிலா ஹோட்டல்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஹோட்டல் நேற்று திறந்து வைக்கப்பட்டது .

இந்த ஹோட்டல் வலையமைப்பு ஆனது 3 பகுதிகளை கொண்டது  . இரண்டு கட்டிடங்கள் மற்றும் ஒரு ஆகாய பாலம் . ஒரு கட்டிடம் 49 மாடிகளை கொண்ட வீடமைப்பு தொகுதி ஆகும் . மற்றைய கட்டிடம் 29 மாடிகளை கொண்ட ஹோட்டல் தொகுதியாகும் .  இது இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் பாலமானது 55 மீட்டர் நீளமாகும் . இது நிலத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது .

தெற்காசியவில் அதிக உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ள ஒரே ஆகாய பாலம் இது என தெரிவிக்கப்படுகிறது .

2014ம் ஆண்டு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த நிர்மாணம் ஆனது ஆரம்பிக்கப்பட்டது .


ஒரே நேரத்தில் 600 பேர் சாப்பிட இடவசதி கொண்ட 6 ரெஸ்டுரண்ட்களை இந்த ஹோட்டல் அமைப்பு கொண்டுளள்து .

இரண்டு கட்டிடங்களையும் இணைக்கும் ஆகாய பாலத்தில் உணவகம் மற்றும் ஓய்வு எடுக்கும் வசதி உண்டு . அவற்றை அனுபவித்து கொண்டு , இரண்டு பக்களிலும் தென்படும் காலி முகத்திடல் மற்றும் கொழும்பி நகரின் காட்சிகளை ரசிக்க முடியும் .

352 ஹோட்டல் அறைகள் இங்கு உண்டு . அவற்றில் ஆடம்பர அறைகள் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் விலைகள் முதல் காணப்படுகிறது  . மேலும் இங்கு ரூபா 60,000 முதல் அறைகளை பெற்றுக்கொள்ள முடியும் .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை